Home
Mobile

மிரட்டலான அம்சங்களுடன் நவம்பர் 13 முதல் மோட்டோ எக்ஸ் 4-ன் இந்திய விற்பனை.!

ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

By Muthuraj

மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற நவம்பர் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் அந்த சாதனம், இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ளிப்கார்ட் வலைத்தளம் ஏற்கனவே மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் விற்பனை சார்ந்த அதன் பிரத்யேக டீஸரை அதன் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலைப்பாட்டில் மோட்டோரோலா இந்தியா அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பல டீஸர்களை வெளியிட்டுள்ளது.

5.2 இன்ச் முழுஎச்டி எல்டிபிஸ் டிஸ்பிளே

5.2 இன்ச் முழுஎச்டி எல்டிபிஸ் டிஸ்பிளே

வெளியான டீசர்கள் வரவிருக்கும் தொலைபேசியின் சிறப்பியல்புகளைக் காட்சிப்படுத்துகிறது. அதன்படி மோட்டோ எக்ஸ் 4 ஆனது, சில ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளமைக்கப்பட்ட டூயல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. 1080 × 1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.2 இன்ச் முழுஎச்டி எல்டிபிஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராஸசர்

ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராஸசர்

அனோடைஸ்டு அலுமினிய சட்டம் மற்றும் 3டி பின்புற முக்கோண வடிவமைப்பு கொண்ட மோட்டோ எக்ஸ் 4 ஆனது கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பை கருவியின் முன் மற்றும் பின்புறத்தில் கொண்டுள்ளது. ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை

இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் உடனான அட்ரெனோ 508 ஜிபியூ மற்றும் இது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. மோட்டோ எக்ஸ் 4 ஆனது 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

15 நிமிடங்களில் 6 மணிநேர பேட்டரி

15 நிமிடங்களில் 6 மணிநேர பேட்டரி

இதன் 15வாட் டர்போசார்ஜர் ஆனது வெறும் 15 நிமிடங்களில் 6 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குமென் நிறுவனம் கூறியுள்ளது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமே, இரட்டை-ஒளி நிலைகளில் வேகமாக போகஸ் செய்யக்கூடிய, இரட்டை ஆட்டோபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட அதன் 12எம்பி+8எம்பி டூயல் ரியர் கேமரா தான்.

இரட்டை ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம்

இரட்டை ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம்

இதன் 12எம்பி கேமராவானது இரட்டை ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம், எப்/ 2.0 மற்றும் 1.4யோஎம் சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மற்றொரு 8எம்பி ரியர் கேமராவானது 120 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ், எப் / 2.2 துளை மற்றும் 1.12யூஎம் பிக்சல் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

16எம்பி செல்பீ கேமரா

16எம்பி செல்பீ கேமரா

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், ப்ளாஷ் கொண்ட 16எம்பி கேமரா உள்ளது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள் பொருள்களையும் அடையாளம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு வணிக அட்டையை அடையாளம் கண்டு, ஒரு பயனரின் தொடர்புகளுடன் அந்த தகவலை சேர்க்கவும் முடியும்.

தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு

தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு

மேலும் இதன் கேமரா பயன்பாட்டில் உள்ள "பேஸ் பில்டர்ஸ்" ஆனது ஸ்னாப்சாட், இன்ஸ்ட்டாகிராம் போன்ற புகைப்பட பில்டர்களை பயனர்களுக்கு வழங்கும். அளவீட்டில் 148.35 x 73.4 x 7.99 மிமீ, 9.45 மிமீ கேமரா பம்ப் மற்றும் 163 கிராம் எடை கொண்டுள்ள இக்கருவி தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 மதிப்பீடும் கொண்டுள்ளது.

சென்சார்களை பொறுத்தமட்டில்

சென்சார்களை பொறுத்தமட்டில்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் அமேசான் அதன் அலெக்ஸா அனுபவத்தையும் சேர்த்துள்ளது. ஒற்றை சிம் ஸ்மார்ட்போன்செ இதன் சென்சார்களை பொறுத்தமட்டில் கைரேகை ரீடர், கிராவிட்டி, ப்ராக்சிமிட்டி, ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னட்டோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் சென்சார் ஹப் ஆகியவைகளை தன்னுள் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto X4 India launch set for November 13, will be Flipkart exclusive. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X