டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் மோட்டோ எக்ஸ்4 (இந்திய வெளியீடு & அம்சங்கள்).!
மோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் வரும் அக்டோபர் 3ஆம் தேதி மோட்டோ எக்ஸ்4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் வெளியிடுகிறது, அதன்படி பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் ஸ்னாப்டிரான் 630செயலியைக் கொண்டுள்ளது, ஆப் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடல்.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.1.2:
மோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, ஜிபிஎஸ், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications