Home
Mobile

டூயல் கேம், 3800எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ எக்ஸ்4.!

இப்போது வரை நிறுவனம் அறிமுகப்படுத்தப்போவது எந்த ஸ்மார்ட்போன் என்று தெரியவில்லை. ஆனால், அக்கருவி மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

மோட்டோரோலா சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 21-ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் ஒரு நிகழ்விற்காக நிறுவனம் பத்திரிகைஅழைப்புகளை அனுப்பியுள்ளது.

டூயல் கேம், 3800எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ எக்ஸ்4.!

எனினும், இப்போது வரை நிறுவனம் அறிமுகப்படுத்தப்போவது எந்த ஸ்மார்ட்போன் என்று தெரியவில்லை. ஆனால், அக்கருவி மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனை பொறுத்தம்மட்டில் அக்கருவி இந்தியாவில் இந்த மாதத்திற்கு பின்னர் வெளியிடப்படலாம். மோட்டோ எக்ஸ் 4, ஜூன் 30 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஒரு புதிய ட்விட்டர் தகவல் கசிவு தெரிவிக்கிறது.

இதற்கு முன்னர் வெளியான அறிக்கையில், மோட்டோ இசெட்2 போர்ஸ், மோட்டோ ஜி5 எஸ் பிளஸ், மற்றும் மோட்டோ எக்ஸ் 4 விலை கசிந்தது. ஆக இதுபோன்ற இந்தியாவில் உத்தியோகபூர்வ விலைக் கசிவானது மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது என்று அர்த்தம்.

தற்போது வெளியான கசிவு உண்மை என்றால், ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அதே நாளில் சந்தையில் கிடைக்காது. மேலும் ட்விட்டர் லீக்ஸ் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில் மோட்டோ எக்ஸ்4-ல் ஒரு கண்ணாடி வடிவமைப்பு மற்றும் இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்று வெளிப்படுத்துகிறது. மேலும் மோட்டோ எக்ஸ்4 ஐபி68 சான்றிதழ் கொண்டு வரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.

இந்த அம்சங்கள் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், மோட்டோ எக்ஸ் 4 ஒரு கண்ணாடி மற்றும் மெட்டல் சேசிஸ் மற்றும் மேலே 3டி கண்ணாடிடன் 5.5 அங்குல டிஸ்பிளேவும் கொண்டிருப்பதாக முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் வன்பொருளை பொறுத்தவரையில், ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டோரோலா எக்ஸ் 4 ஆனது க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவுடன் 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Moto X4 to be announced on June 30: Likely to come with dual camera and 3800mAh battery. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X