அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன்.!
ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழ் கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மோட்டோ எக்ஸ்4 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

விலைகுறைப்பு:
மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் முறையே முந்தைய விலை ரூ.20,999, ரூ.22,999, ரூ.22,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,744, ரூ.15,767, ரூ.19,998-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முழு எச்டி டிஸ்பிளே
இது ஒரு 5.2 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி இக்கருவி இரண்டு சேமிப்பு மாதிரிகளில் - 2 ஜிபி ரேம் +32 ஜிபி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி - வாங்க கிடைக்கிறது. உடன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழியாக சேமிப்பு விரிவாக்க ஆதரவையும் வழங்குகிறது.

பின்புற கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.அதாவது 12எம்பி என்கிற ஒரு முதன்மை ஆர்பிஜி சென்சார் உடன் 8எம்பி பரந்த-கோண சென்சார் அளவிலான இரண்டாம் நிலை கேமராவை கொண்டுள்ளது. இது போர்ட்ரெயிட் பயன்முறையை ஆதரிக்கிறது.

16எம்பி செல்பீ கேமரா
முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ஒரு 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. மோட்டோரோலா இந்தியா ஏற்கனவே மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனிற்கு அதன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ புதுப்பித்தலை உருட்ட ஆரம்பித்து விட்டதால் இக்கருவியும் ஓரியோ அப்டேட்டை பெறுமென நம்பலாம்.

3000எம்ஏஎச் பேட்டரி
ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழ் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications