Home
Mobile

200எம்பி மெயின் கேமரா: அதிகம் எதிர்பார்த்த Moto X30 Pro ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தரமான கேமரா ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அதிகமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக கேமரா அமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறது மோட்டோ நிறுவனம்.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

இந்நிலையில் அதிகம் எதிர்பார்த்த மோட்டோ எக்ஸ்30 ப்ரோ (Moto X30 Pro) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவதுஇந்த மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதம் இறுதியில் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் 200எம்பி 1/1.22-inch கேமரா தான். இது போன்ற 200எம்பி கேமராக்கள் வெளிவந்தால் டிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு வேலையே இருக்காது. குறிப்பாக இந்த 200எம்பி கேமராவுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

வேறலெவல் சிப்செட்

வேறலெவல் சிப்செட்

இந்த மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட்-ஐ விட இதன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் இருப்பதால் கேமிங் பயனர்கள் இதை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு
144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் + பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவரும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

இதுதவிர 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த மாதம் இறுதி வரை காத்திருக்கவும்.

ஒருவேளை இப்போது ஒரு நல்ல மோட்டோ போன் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை பாருங்கள்.

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் உள்ளன. இது சிறந்தஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

 மோட்டோ ஜி42  சிப்செட்

மோட்டோ ஜி42 சிப்செட்

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் அருமையான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவதுகுவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உட்பட பல சிறப்பான அம்சங்களுடன்இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசத்தலான கேமரா

அசத்தலான கேமரா

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஅமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதியஸ்மார்ட்போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Moto X30 Pro with 200MP main camera to launch soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X