அசரவைக்கும் Moto.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. 512ஜிபி மெமரி.. அறிமுகமானது புதிய போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ எஸ்50 (Moto S50) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். அதேபோல் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் சோனி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ எஸ்50 அம்சங்கள் (Moto S50 Specifications): தரமான டைமன்சிட்டி 7300 (Dimensity 7300 chipset) சிப்செட் உடன் மோட்டோ எஸ்50 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

புதிய மோட்டோ எஸ்50 போன் 6.4-இன்ச் 1.5கே OLED LTPO டிஸ்பிளேவை டிஸ்பிளே உடன் இந்த வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) ஆதரவு உடனான 50எம்பி பிரைமரி சோனி ஐஎம்எக்ஸ் 896 மெயின் சென்சார் (Sony IMX896 main sensor)+ 13எம்பி கேலக்ஸிகோர் GC13A2 அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி Samsung S5K3K1 டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ எஸ்50 ஸ்மார்ட்போன்.
இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom)ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோ எஸ்50 ஸ்மார்ட்போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ எஸ்50 விற்பனைக்கு வரும். மேலும் பெர்சிமன் ஆரஞ்சு (Persimmon Orange), ஃப்ளோரா ப்ளூ (Flora Blue) மற்றும் லட்டே (Latte) போன்ற நிறங்களில் இந்த புதிய மோட்டோ எஸ்50 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோ எஸ்50 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோ எஸ்50 போன் வெளிவந்துள்ளது. பின்பு என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர 4310mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோ எஸ்50 வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
குறிப்பாக 13 நிமிடங்களில் இந்த போனை 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த போனின் எடை 170 கிராம் ஆகும். அதேபோல் மோட்டோ எஸ்50 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 2,199 Yuan (இந்திய மதிப்பில் ரூ.26,007)-ஆக உள்ளது. இந்த புதிய போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications