உலகத்தின் முதல் 4 வருட வாரண்டி Mobile.. தூள் கிளப்ப போகும் Motorola.. என்ன விலை? எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் விரைவில் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை வரிசையாக அறிமுகம் செய்யவுள்ளது. இதில் குறிப்பிட்டு கூறும் வகையில் மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் 4 வருட உத்தரவாதத்துடன் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உலகத்தில் முதல் முறையாக 4 வருட வாரன்டியை பெரும் முதல் ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) வெளிவர இருக்கிறது. இந்த போனின் மற்ற சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
லெனோவா (Lenovo) நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை வரும் ஜூன் 25, 2024 ஆம் தேதி சீனாவில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் முக்கியமான 3 போன்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ S50 நியோ (Moto S50 Neo):
இது மோட்டோ ரேஸர் 50 (Moto Razr 50), மோட்டோ ரேஸர் 50 அல்ட்ரா (Moto Razr 50 Ultra), மற்றும் மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஆகிய மூன்று மாடல்கள் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். இந்த மூன்று மாடல்களில் மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) என்ற ஸ்மார்ட்போன் மாடல் தற்போது உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மோட்டோ S50 நியோ பற்றிய போஸ்டரே ஒரு முக்கிய காரணமாகும். காரணம், விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஸ்மார்ட்போன் சாதனம் 4 வருட வாரன்டியை பெரும் என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. ஆச்சரியப்படும் விதமாக இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்காத ஒரு வாரன்டியை (unbelievable warranty) மோட்டோரோலா தற்போது வழங்கியுள்ளது.
உலகத்தில் முதல் முறையாக 4 வருட வாரன்டியை பெரும் முதல் ஸ்மார்ட்போன் சாதனமாக (world's first 4 years warranty smartphone) மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) அறிமுகமாகிறது. இந்த 4 வருட வாரன்டியில் உங்களுக்கு முழுமையாக 1 வருட ஸ்டாண்டர்ட் வாரன்டி (standard warranty) மற்றும் 3 வருட எக்ஸ்டெண்டட் வாரன்டியை (extended warranty) மோட்டோரோலா வழங்குவதாக கூறியுள்ளது.
உலகத்தின் முதல் 4 வருட வாரண்டி Mobile.. தூள் கிளப்ப போகும் Motorola:
இதற்கு முன்பு சியோமி (Xiaomi), ஒன்பிளஸ் (OnePlus), லெனோவா (Lenovo) போன்ற நிறுவனங்கள் 2 வருட வாரன்டியை (2 years warranty) வழங்கியது. அதேபோல், மெய்ஸோ (Meizo) போன்ற நிறுவனங்கள் 3 வருட வாரன்டியை (3 years warranty) வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளி மோட்டோரோலா நிறுவனம் ஒரு படி மேலே சென்று, 4 வருட வாரன்டியை வழங்கியுள்ளது.
இந்த புதிய மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) சாதனம் உலக சந்தையில் மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) என்ற பெயரில் உலக சந்தையில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது 6.6" இன்ச் கொண்ட 120Hz OLED டிஸ்பிளேவை பெறுகிறது. இது 5000mAh பேட்டரியுடன் 33W ரேப்பிட் சார்ஜிங்கை பெரும். இதில் 50MP டூயல் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா இடம்பெறும். இதன் விலை மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications