கேரண்டி உறுதி., இதுவரை இப்படி ஒன்னு பார்த்திருக்கவே மாட்டிங்க: அதிவளைவு MOTO ஸ்மார்ட்போன்!

|

Motorola சீனாவில் ப்ரீமியம் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் மிகவும் ப்ரீமியம் தரம் வாய்ந்த Moto Razr 2022 எனப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

அதேபோல் 200MP முதன்மை கேமராவுடன் உடன் உலகின் முதல் ஸ்மார்ட்போனான Moto X30 Pro-ஐ நிறுவனம் அறிமுகம் செய்தது. இதனுடன் மோட்டோ ஒரு குறிப்பிடத்தக்க ப்ரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போனின் சுவாரஸ்ய தகவலை தான் பார்க்கப்போகிறோம்.

மோட்டோ எஸ்30 ப்ரோ பிரத்யேக அம்சம்

மோட்டோ எஸ்30 ப்ரோ பிரத்யேக அம்சம்

மோட்டோ எஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ரீமியம் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே உடன் செல்பி கேமரா வசதி இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு வளைந்த டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என டிஸ்ப்ளேயின் கீழ் புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

அழகான தோற்றத்துடன் புதிய ஸ்மார்ட்போன்

அழகான தோற்றத்துடன் புதிய ஸ்மார்ட்போன்

அதேபோல் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் அழகான சதுர வடிவில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு முக்கிய கேமராக்கள் உடன் மூன்றாவது சென்சார் மற்றும் டூயல் எல்இடி ஃப்ளாஷ் இதில் இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வசதி உள்ளது.

Moto S30 Pro சிறப்பம்சங்கள்

Moto S30 Pro சிறப்பம்சங்கள்

Moto S30 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவிலான வளைந்த டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.

Moto S30 Pro ஸ்மார்ட்போனானது 10 பிட் வளைந்த ஓஎல்இடி பேனல் கொண்டிருக்கிறது. இதில் 6.5 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

இதில் முழு எச்டி+ தெளிவுத்திறன் கொண்ட HDR10+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இது இயக்கப்படுகிறது. அதேபோல் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன.

மூன்று ரேம் வேரியண்ட்கள்

மூன்று ரேம் வேரியண்ட்கள்

Moto S30 Pro ஸ்மார்ட்போனானது மூன்று ரேம் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அது 8 GB + 128 GB, 12 GB + 256 GB மற்றும் 12 GB + 512 GB ஆகும். பிற ப்ரீமியம் மோட்டோ ஸ்மார்ட்போன்களின் போன்றே இந்த ஸ்மார்ட்போன் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட்டுக்கான IP52 சான்றிதழை கொண்டிருக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது. இதில் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி பிரதான கேமரா

50 எம்பி பிரதான கேமரா

புதிய Moto S30 Pro ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் பின்புறத்தில் 50 எம்பி பிரதான கேமராவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இதில் 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் இருக்கிறது.

செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் பெரிய அளவிலான 32 எம்பி கேமரா கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Moto S30 Pro விலை என்ன

Moto S30 Pro விலை என்ன

Moto S30 Pro விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவின் விலை ரூ.25,900 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.31,800 எனவும் 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் ரூ.34,180 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pic: Social Media

Best Mobiles in India

English summary
Moto S30 Pro Launched With Snapdragon 888+ SoC, Curved Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X