மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சாதனம் முதலில் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. பின்னர் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்தது.

தற்போது இந்த மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இப்போது மோட்டோரோலா ரேசர் சாதனம் July 2021 security அப்டேட் கூட பெறுகிறது. இந்த அப்டேட் மோட்டோரோலா ரேசர் சாதனத்திற்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.

மோட்டோ ரேசர்ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல எல்இடி பிரதான டிஸ்ப்ளே மற்றும் 2.7 அங்குல எல்இடி இரண்டாம் நிலை டிஸ்ப்ளே வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதுமட்டுமின்றி ப்ளஷ் கோல்ட் இபாலிஷ் செய்யப்பட்ட கிராஃபைட் மற்றும் திரவ மெர்குரி ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

இந்த மோட்டோ ரேசர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் அட்ரினோ 620 ஜி.பீ.யு வசதியுடன் வெளிவந்தது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு இந்த மோட்டோரோலா ரேசர் சாதனத்தில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 4 கே வீடியோரெக்கார்டிங்கிற்கான ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.

மோட்டோ ரேசர் சாதனத்தில் 2510 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு, ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் பேண்ட் வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ரேசர் சாதனம்.


Click it and Unblock the Notifications