மே 6: விற்பனைக்கு வரும் அசத்தலான மோட்டோரோலா ரேசர்.!

|

மோட்டோரோலா ரேசர் சாதனம் ஏப்ரல் 2-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று இருந்த நிலையில், தற்சமயம் நாடு முழுவதும் பூட்டப்பட்டிருக்கும் காரணத்தால் வரும் மே 6-ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6.2-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே

6.2-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே

மோட்டோரோலா ரேசர் சாதனம் 6.2-இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளே வசதி மற்றும் 21: 9 விகிதம் மற்றும் 2,142x876 பிக்சல்கள்
தீர்மானம் உடையது, பின்பு மூடப்படும்போது 2.7-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

மோட்டோரோலா ரேசர் சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 இ-சிம் ஆதரவு

இந்த மொபைல்போனின் சிப்செட் பற்றி பேசுகையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வசதியுடன் வெளிவரும்,பின்பு வலக்கமான சிம் கார்டு ஆதரவுக்கு பதிலாக இ-சிம் ஆதரவுடன் இந்த ரேசர் சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

அறிமுகம் செய்த 13 நாளில் 5 கோடி டவுன்லோட்: பொதுமக்களிடம் அட்டகாச வரவேற்பு!

 16MP பின்புற f/1.7, 1.22um கேமரா

மோட்டோரோலா ரேசர் ஆனது16MP பின்புற f/1.7, 1.22um கேமிரா, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் (AF), லேசர் AF, கலர்
கோரேலேட்டட் டெம்பரேச்சர் (CCT) மற்றும் இரட்டை LED ப்ளாஷ் கொண்டுள்ளது. செல்பிக்களுக்கு, இது உள்ளே 5MP செல்பி f/2.0, 1.12um கேமரா மற்றும் ஸ்கிரீன் பிளாஷ் கொண்டுள்ளது.

15வாட் பாஸ்ட் சார்ஜிங்

இந்த சாதனத்தில் என்எப்எச், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி, ஸ்பிளாஸ் ப்ரூப் நீர் எதிர்ப்பு நானோகேட்டிங் ஆகியவற்றை கொண்டுள்ளது, பின்பு மடிக்கக்கூடிய தடிமனான அடிதளத்தில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது. மேலும் 2510எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவரும்.

அரசு வழங்கும் E-pass: ஊரடங்கில் அரசு அனுமதியோடு பயணம் செய்யலாம்- இதோ வழிமுறை!அரசு வழங்கும் E-pass: ஊரடங்கில் அரசு அனுமதியோடு பயணம் செய்யலாம்- இதோ வழிமுறை!

சுருக்கமாக இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது?

6.2' இன்ச் கொண்ட 2142 x 876 பிக்சல் உடைய pOLED டிஸ்பிளே
2.7' இன்ச் கொண்ட 600 x 800 பிக்சல் உடைய gOLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 9 பை
அட்ரினோ 616 ஜி.பீ.
ஸ்னாப்டிராகன் 710 செயலி
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
16 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
15W டர்போ பூஸ்ட் சார்ஜிங்
2510 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Moto Razr first sale to be now held on May 6 in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X