நோக்கியாவை தொடர்நது மோட்டோரோலா ரிட்டர்ன்ஸ்.!

மோட்டோரோலா ரேஸர் மொபைல் ஆனது, ஒரு ஆகப்பெரிய கடந்த கால வெற்றியை கொண்டிருக்கும் ஒரு கருவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நோக்கியா 3310-ன் சமீபத்திய பதிப்பு போல மிகவும் பிரபலமடையுமா.?

|

மோட்டோரோலாவின் சகாப்தத்தில் ஒரு பரவலான முறையில், மிகவும் நேசிக்கப்பட்ட, ஒரு கூர்மையான வடிவமைப்பு மற்றும் குறைந்தபட்ச நிறங்கள் கொண்ட ஒரு கருவிதான் - மோட்டோரோலா ரேஸர். அப்படியான மோட்டோரோலாவின் மிகவும் நாகரீகமான மற்றும் பழமையான ரேஸர் (RAZR) மொபைலை இன்னும் எத்தனைபேர் நினைவில் கொண்டுளீர்கள்.?

அது மீண்டும் உருவாக்கம் பெறுமென்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் லீக்ஸ் தகவலாக அல்ல, கிட்டத்தட்ட ஒரு அதிகாரப்பூர்வமான ஒரு தகவலாகவே வெளியாகியுள்ளது. நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் பாணியில் பழைய மொபைல்களை மோட்டோரோலாவும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

மிகவும் பிரபலமடையுமா.?

மிகவும் பிரபலமடையுமா.?

மோட்டோரோலா ரேஸர் மொபைல் ஆனது, ஒரு ஆகப்பெரிய கடந்த கால வெற்றியை கொண்டிருக்கும் ஒரு கருவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நோக்கியா 3310-ன் சமீபத்திய பதிப்பு போல மிகவும் பிரபலமடையுமா.? என்பது தான் இங்கு எழும் ஒரே கேள்வி.!

வதந்தி

வதந்தி

இந்த வதந்தியானது மோட்டோரோலாவின் தற்போதைய உரிமையாளரான லெனோவா நிறுவனத்தின் சிஇஓ வெளியிட்ட சில தகவல்களின் வழியே உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.

"நிஜமாக வாய்ப்புள்ளது"

ரேஸர் சமொபைலின் மருவீழியெடு சாத்தியமானதா.? என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு லெனோவாவின் தலைமை நிர்வாக அதிகாரியான யங் யுவான்சிங், "புதிய தொழில்நுட்பத்துடன், குறிப்பாக மடங்கும் திரைகள் கொண்ட எங்களின் ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் மேலும் புதுமைகளைப் பார்ப்போம் என நினைக்கிறேன், அதன்வழியாக உங்களின் கேள்வி (மோட்டோரோலா ரேஸர்) நிஜமாக வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.

நோக்கியா 8110 4ஜி

நோக்கியா 8110 4ஜி

சமீபத்தில் நோக்கியா நிறுவனத்தின் பழைய 8110 மொபைலின் 4ஜி மாறுபாடு அறிமுகமானதும். அது 1996-ஆம் ஆண்டில் வெளியான நோக்கியா நிறுவனத்தின் பிரபல பனானா (வாழைப்பழம்) மொபைலின் சமீபத்திய பதிப்பாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிடைக்கும் தன்மை விலை

கிடைக்கும் தன்மை விலை

நோக்கியா 8110 வெளியீட்டு தேதியானது வருகிற மே 2018-ல் அமைக்கப்படும். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் ஒற்றை மற்றும் இரட்டை சிம் வகைகளில் கிடைக்மென்று நம்புகிறோம். மற்ற நாடுகளில் கிடைக்கும் தன்மை பற்றிய வார்த்தைகள் இல்லை. நோக்கியா 8110 4ஜி ஆனது சுமார் 79 யூரோவாக இருக்கலாம். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.6290/- ஆக இருக்கலாம்.

நோக்கியா 8110 4ஜி வடிவமைப்பு

நோக்கியா 8110 4ஜி வடிவமைப்பு

நோக்கியா 8110 4ஜி ஆனது அதன் அசல் கருவியின் தனித்துவமான வளைவு மற்றும் ஸ்லைடரை கொண்டுள்ளது. மற்றும் இன்னும் சிறிய வடிவமைப்பை பெற்று கைகளுக்குள் இன்னும் எளிமையாக பொருந்துகிறது.

பொத்தான்

பொத்தான்

இது ஒரு தெளிவான பிளாஸ்டிக் உடல் கொண்டு அதில் மைக்ரோயூஎஸ்பி, ஹெட்ஜாக், பவர் மற்றும் பொத்தான்களை கொண்டுள்ளது. விசைப்பலகையை பொறுத்தமட்டில் ஸ்லைடரின் கீழ் மறைந்துள்ளது. அது வழக்கமான நேவிகேஷன் மற்றும் எண் விசைகளை கொண்டுள்ளது. இக்கருவி மொத்தம் இரண்டு நிறங்கள் - பாரம்பரிய கருப்பு மற்றும் வாழை மஞ்சள் - கிடைக்கிறது.

நோக்கியா 8110 4ஜி டிஸ்பிளே

நோக்கியா 8110 4ஜி டிஸ்பிளே

அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா 8110 4ஜி ஆனது ஒரு க்யூவிஜிஏ (QVGA) தீர்மானம் கொண்ட 2.4 அங்குல வளைந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு தொடுதிரை அல்ல, எனவே போனைப் பயன்படுத்துவதற்கு கீழே உள்ள நேவிகேஷன் பொத்தான்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8110 4ஜி பேட்டரி

நோக்கியா 8110 4ஜி பேட்டரி

புதிய நோக்கியா 8110 4ஜி ஆனது அதன் உள்ளே ஒரு 1500எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவன்தான் கூற்றுபப்டி, இதன் முழுமையான சார்ஜ் ஆனது 25 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தை வழங்கும். மற்றும் இது 8.5 மணி நேர எல்டிஇ குரல் அழைப்பு நேரம் வழங்கும் என்பதும் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

நோக்கியா 8110 4ஜி பவர்

நோக்கியா 8110 4ஜி பவர்

இக்கருவியானது க்வால்காம் 205 சிப்செட் (இரட்டை கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ்) மற்றும் 512எம்பி ஆகியவற்றின் கீழ் இயங்குகிறது. இது இன்றைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது சக்தி வாய்ந்தது இல்லை தான். ஆனால் ஒரு பீச்சர் தொலைபேசிக்கு மிகவும் போதுமானதாக இருக்க வேண்டும்.

நோக்கியா 8110 4ஜி இயக்க முறைமை

நோக்கியா 8110 4ஜி இயக்க முறைமை

நோக்கியா 8110 4ஜி சாதனத்தின் இயக்க்கமுறைமையை ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் என்று அழைக்கலாம். இது உங்களின் திரை அனுபவத்தை எளிதாகும். உடன் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் அப்ளிகேஷன்ஸ் ஆகியவவைகளுடன் புகழ்பெற்ற ஸ்நேக் கேமின் ரீபூட்டட் பதிப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
4ஜிபி சேமிப்பு

4ஜிபி சேமிப்பு

வரவிருக்கும் மாதங்களில் இந்த கைபேசிக்கு, இன்னும் அதிகமான பயன்பாடுகள் கிடைக்கும் என்று நம்பலாம். அதற்கு இதன் 4ஜி இணைப்பு உதவும். மேலும் நோக்கியா 8110 4ஜி உடன் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதியும் கிடைக்கும். புகைப்படங்கள், இசை மற்றும் பயன்பாடுகள் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆகியவற்றை சேமிக்க ஹேண்ட்செட்டில் 4ஜிபி சேமிப்பு உள்ளது.

நோக்கியா 8110 4ஜி கேமரா

நோக்கியா 8110 4ஜி கேமரா

நோக்கியா 8110 4ஜி ஆனது அதன் பின்புறத்தில் ஒற்றை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 2எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இது மிகவும் அதிகமான எம்பி கொண்ட கேமராவாக இல்லை என்பது வெளிப்படை. மேலும் பல நோக்கியா கருவிகள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Moto Razr Comeback Hinted by Lenovo CEO at MWC 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X