Home
Mobile

ரெடியா இருங்க.. அடுத்த 4 நாட்கள்.. 8 புதிய ஸ்மார்ட்போன்கள்.. எந்த தேதியில், என்ன விலைக்கு வரும்?

இன்று (ஜூலை 3) தொடங்கி அடுத்த நாட்களில், அதாவது ஜூலை 7 ஆம் தேதிகுள் இந்திய மார்க்கெட்டில் மொத்தம் 8 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எந்தெந்த தேதியில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்? அவற்றின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் இதோ விவரங்கள்:

மோட்டோ ரேஸர் 40 மற்றும் ரேஸர் 40 அல்ட்ரா: மோட்டோரோலாவின் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் இன்று, அதாவது ஜூலை 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை மோட்டோ ரேஸர் 40 (Moto Razr 40) ஆனது ரூ.60,000 க்கும், ரேஸர் 40 அல்ட்ராவானது ரூ.90,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

ரெடியா இருங்க.. அடுத்த 4 நாட்கள்.. 8 புதிய ஸ்மார்ட்போன்கள்!

ஐக்யூ நியோ 7 ப்ரோ: வீடியோ கேம் பிரியர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQOO Neo 7 Pro) ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ரூ.34,000 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி: ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஜூலை 5 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஆனது ரூ.32,000 க்கும் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆனது ரூ.25,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

ரியல்மி நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ: ரியல்மியின் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஜூலை 6 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ 60 (Realme Narzo 60) ஆனது ரூ.18,000 க்கும், ரியல்மி நார்சோ 60 ப்ரோ (Realme Narzo 60 Pro) மாடலானது ரூ.22,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி: சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனானது ஜூலை 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 6,000mAh பேட்டரியுடன் வரும் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34) ஸ்மார்ட்போனானது ரூ.19,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 7 ஆம் தேதிக்கு பின்னர் அறிமுகமாகும் மற்ற முக்கியமான ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆனது ஜூலை 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் 2-விற்கு முன்னதாக, அதாவது ஜூலை 10 ஆம் தேதியன்று ஒப்போவின் ரெனோ 10 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். இதன் கீழ் ஒப்போ ரெனோ 10 ப்ரோ (Oppo Reno 10 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் (Oppo Reno 10 Pro Pus) என மொத்தம் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

ரெனோ 10 ப்ரோ சீரிஸின் கீழ் அறிமுகமாகும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒப்போ நிறுவனத்தின் பெஸ்ட் கேமரா போன்களாக உருவாக்கப்பட்டுள்ளன. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரெனோ 10 ப்ரோ மாடலானது ரூ.40,000 பட்ஜெட்டிலும், ப்ரோ பிளஸ் மாடலானது ரூ.45,000 பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Razr 40 Ultra OnePlus Nord 3 Realme Narzo 60 Pro Samsung Galaxy M34 Launch Date Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X