லிஸ்ட்டில் இந்தியா எங்க? Motorola உடன் மல்லுக்கட்டும் மோட்டோ ரசிகர்கள்!

|

மோட்டோரோலா நிறுவனம் சீனாவில் மோட்டோ ரேசர் 2022 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை தொடர்ந்து ஐரோப்பாவில் இந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ நிறுவனம் உலகளவில் ரேசர் சீரிஸ் இன் புது சீரிஸை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிறுவனம் எட்ஜ் 30 சீரிஸை அறிமுகம் செய்தது.

மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்

மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு ரேசர் தொடரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. தனித்துவமான வடிவமைப்புடன் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் என மோட்டோ ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

இருப்பினும் நிறுவனம் தனித்துவமான 200 எம்பி கேமரா ஆதரவுடன் கூடிய எட்ஜ் 30 சீரிஸை அறிமுகம் செய்தது. பிற ஸ்மார்ட்போன்களில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் தனித்து நின்றாலும் இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அளிக்கும் பூர்த்தியை மோட்டோ வாடிக்கையாளர்கள் இதில் பெறவில்லை.

வீனஸ் மற்றும் ஜூனோ

வீனஸ் மற்றும் ஜூனோ

இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்குள் மோட்டோரோலா இரண்டு ரேஸர் பிராண்டட் போன்களை அறிமுகப்படுத்தலாம் என டிப்ஸ்டர் இவான் பிளாஸ் கணித்திருக்கிறார். இந்த சீரிஸ் இல் இரண்டு மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த மாடல்களுக்கு வீனஸ் மற்றும் ஜூனோ என குறியீட்டு பெயர் சூடப்பட்டிருக்கிறது.

விரைவில் அறிமுகம் செய்யப்படும் நாடுகள்

விரைவில் அறிமுகம் செய்யப்படும் நாடுகள்

லெனோவாவுக்கு சொந்தமான நிறுவனம் முன்பு சீனாவில் ரேசர் 2022 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் வேறு எந்த நாட்டிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இது மோட்டோவின் ரசிகர்களை பெரிய அளவு ஏமாற்றமடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது.

டூயல் டிஸ்ப்ளே ஆதரவு

டூயல் டிஸ்ப்ளே ஆதரவு

Moto Razr 2022 ஆனது டூயல் காட்சிகளை கொண்டிருக்கிறது. இதன் முதன்மை டிஸ்ப்ளே ஆக 2,400 x 1,080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் நிலை டிஸ்ப்ளே ஆக 800 x 573 பிக்சல்கள் கொண்ட 2.65-இன்ச் OLED டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது.

முதன்மை தர சிப்செட் ஆதரவு

முதன்மை தர சிப்செட் ஆதரவு

மோட்டோ ரேசர் 2022 ஸ்மார்ட்போனானது குவால்காம் இன் முதன்மை தர சிப்செட் மூலம் இயக்கப்படும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். புதிய மோட்டோ ரேசர் 2022 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 18 ஜிபி ரேம் என்ற மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் எனவும் இந்த ரேம் வகைகள் உடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என்ற இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாடுகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

புதிய ரோலபில் போன் கான்செப்ட்

புதிய ரோலபில் போன் கான்செப்ட்

நீண்ட காலமாக ஒரே மாதிரியான வடிவமைப்பு ஸ்மார்ட்போன் என்ற நிலை சமீப காலமாக மாறி வருகிறது. ஃபோல்டபிள் மாடல், ஃப்ளிப் மாடல் மற்றும் ரோலபிள் போன் என பல கான்செப்ட் மாடல்கள் அறிமுகமாகி வருகிறது. சாம்சங் நிறுவனம் இதில் முன்னணியில் இருக்கிறது. பிற நிறுவனங்களும் இந்த பிரிவில் போட்டப்போடத் தொடங்கி இருக்கிறது. அதன்படி மோட்டோரோலா நிறுவனம் புதிய ரோலபில் போன் கான்செப்ட்-ஐ சமீபத்தில் அறிமுகம் செய்தது.

மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன்

மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன்

அதாவது லெனோவா டெக் வேர்ல்டு நிகழ்ச்சியில் மோட்டோரோலா நிறுவனம் இந்த ரோலபில் சாதனத்தை அறிமுகம் செய்ததாகத் தகவல் வெளிவந்தது. அதாவது இதுவரை ரோலபில் போன்களின் ரோலபில் ஸ்கிரீன் ஆனது அகல வாக்கில் நீண்டு டேப்லெட் அளவு டிஸ்ப்ளே போன்று மாறும் வகையில் தான் உருவாக்கப்பட்டு இருந்தது.

ஆனால் மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன் ஆனது சிறிய ஸ்கிரீன் கொண்ட சாதனமாக இருந்து நீள வாக்கில் நீண்டு சற்று பெரிய டிஸ்ப்ளேவாக மாறுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன்.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட தரமான ரோலபில் போனை சந்தைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். ஆனால் இந்தபோன் சந்தைக்கு வர இன்னும் சில காலங்கள் ஆகும் என்று தெரிகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Moto Razr 2022 may launch later in India than other countries!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X