விலையை கேட்டா தலை சுத்திடும்: டூயல் டிஸ்ப்ளே உடன் அறிமுகமான Moto Smartphone!

|

லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Moto X30 Pro மற்றும் Moto S30 Pro தொடர்களுடன் நிறுவனம் ப்ரீமியம் ரக Moto Razr 2022 ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது.

pOLED டிஸ்ப்ளேக்கள், 50MP டூயல் கேமராக்கள்

pOLED டிஸ்ப்ளேக்கள், 50MP டூயல் கேமராக்கள்

Motorola Razr 2022 ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காரணங்களின் தாமதத்தால் இன்று (ஆகஸ்ட் 11) அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா தனது ப்ரீமியம் வெளியீட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக Moto X30 Pro மற்றும் S30 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனுடன் pOLED டிஸ்ப்ளேக்கள், 50MP டூயல் கேமராக்கள் உடன் மோட்டோ ரேஸர் 2022 அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு மேம்பட்ட ஆதரவுகள்

பல்வேறு மேம்பட்ட ஆதரவுகள்

Moto Razr 2022 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் கேமரா வடிவமைப்பு இருக்கிறது.

முன்னதாக அறிமுகமான Moto Razr 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபோல்டபிள் ஆதரவோடு ட்ரிம் செய்யப்பட்ட வலது இடது புறம், குறுகிய பெசல்கள் என பல மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

144 ஹெர்ட்ஸ் HDR10+ ஆதரவு

144 ஹெர்ட்ஸ் HDR10+ ஆதரவு

புதிய Moto Razr 2022 ஆனது 6.7-இன்ச் pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் ஸ்மார்ட்போன் மூடிய நிலையில் இருக்கும் போது, அதன் மேற்புறத்தில் சிறிய 2.7 இன்ச் pOLED டிஸ்ப்ளே இருக்கிறது.

இந்த டிஸ்ப்ளேவில் நோட்டிபிகேஷன்களை பார்க்கலாம் மற்றும் கேம்கள் விளையாடலாம். ஸ்மார்ட்போனில் உள்ள பெரிய டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், HDR10+ ஆதரவு, டிசி டிம்மிங் மற்றும் முழு எச்டி+ தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Moto Razr 2022 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது Snapdragon 8+ Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இது சமீபத்திய மற்றும் மேம்பட்ட சிப்செட் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது அதிகபட்சமாக 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகி உள்ளது.

மோட்டோ ரேஸர் 2022 ஆனது MyUI உடனான ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 3500 mAh பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

Moto Razr 2022 ஆனது OIS ஆதரவுடனான 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் என டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

Moto Razr 2022 சிறப்பம்சங்கள்

Moto Razr 2022 சிறப்பம்சங்கள்

 • மோட்டோ ரேஸர் 2022 ஆனது 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதனுடன் HDR10+ மற்றும் DC டிம்மிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
 • ஸ்மார்ட்போனில் 2.7 இன்ச் pOLED டிஸ்ப்ளே இருக்கிறது.
 • இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது.
 • 50 எம்பி ப்ரைமரி சென்சார் உடன் டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது.
 • இரண்டாவது கேமராவாக 13 எம்பி வைட் ஆங்கிள் சென்சார் இருக்கிறது.
 • செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
 • டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கூடிய ஸ்பீக்கர்கள் உள்ளன.
 • Motorola Razr 2022 விலை

  Motorola Razr 2022 விலை

  Motorola Razr 2022 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 5,999 ஆக இருக்கிறது.இந்திய விலை மதிப்புப்படி ரூ.71,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CYN 6,499 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CYN 7,299 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Moto Razr 2022 Launched with 50mp Dual Cameras, pOLED Display and More: Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X