மோட்டோ ரேஸர் வாங்க அருமையான வாய்ப்பு: ரூ.30,000 தள்ளுபடி உடனே முந்துங்கள்!
மோட்டோ ரேஸர்(2019) ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.10,000 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ரேஸ்ர் (2019)
மோட்டோரோலா ரேஸ்ர் (2019) இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாகும். மோட்டோ ரேஸர் ஸ்மார்ட்போனின் விலையை நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.30,000 தள்ளுபடி பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் விலை ரூ.94,999
மோட்டோ ரேஸர் ஸ்மார்ட்போன் ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோ வருகிறது. மோட்டோ ரேஸர் (2019) ஸ்மார்ட்போன் இந்தாண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின்போது இதன் விலை ரூ.1,24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.30,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.94,999 என்ற விலையில் கிடைக்கிறது.

ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலும்
மோட்டோ ரேஸர் தற்போதைய விலையிலேயே ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலும். அதுமட்டுமின்றி கூடுதலாக ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிகக்கையாளர்கள், வங்கி அட்டைமூலம் வாங்கும்போது ரூ.10,000 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மரா்ட்போனை வாங்கும்போது ரூ.84,999 என்ற விலையில் வாங்கலாம்.

ரூ.30,000 தள்ளுபடி
மோட்டோ ரேஸர்(2019) ஸ்மார்ட்போனை டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கும்போதும் இந்த ரூ.30,000 தள்ளுபடி கிடைக்கும். மோட்டோரோலா ரேஸர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்லாம்.

6.2 இன்ச் ஓஎல்இடி ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
மோட்டோரோலா ரேஸர் (2019) 6.2 இன்ச் ஓஎல்இடி ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஓசி வசதியோடு 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இது பின்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராவும், 128 ஜிபி உள்சேமிப்பு வசதியும் கொண்டுள்ளது. அதோடு 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
மோட்டோ ரேஸர்(2019) இரண்டாக மடிக்கக்கூடியது என்பது இதன் பிரத்யேக பயன்பாடாகும். இந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவர்களுக்கு இதுசரியான நேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications