அசத்தலான மோட்டோ பி30, மோட்டோ இசெட்3, மோட்டோ இ5 பிளஸ் அறிமுகம்: விலை???
மோடடோ இசெட்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தற்சயம் சீனாவில் மோட்டோ பி30, மோட்டோ இசெட்3, மோட்டோ இ5 பிளஸ் என்ற ஸமார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட் மற்றும் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளம் மற்றும் பல மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் இந்தியாவில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது என்று கூறவேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ பி30:
மோட்டோ பி30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோ பி30 விலை:
மோட்டோ பி30 ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.21,300-ஆக உள்ளது.

மோட்டோ இசெட்3:
மோடடோ இசெட்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மோட்டோ இசெட்3 விலை:
மோட்டோ இசெட்3 ஸ்மார்ட்போனில் 12எம்பி +12எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.40,000-ஆக உள்ளது.

மோட்டோ இ5 பிளஸ்:
மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு குவால்காம் ஸனாப்டிராகன் 430 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜிபி/4ஜிபி ரேம் & 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மோட்டோ இ5 பிளஸ் விலை:
மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.13,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications