Home
Mobile

முடிச்சு விட்டான் Moto.. அப்படி போடு விலையில் 144Hz pOLED டிஸ்பிளே, 12GB ரேம், 50MP சோனி கேமரா, 5500mAh!

ஆல் மோட்டோரோலா ஃபேன்ஸ் அசெம்பிள் என்று கூறும்படியான அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயத்தின் கீழ்.. மோட்டோரோலா (Motorola) நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான மோட்டோ ஜி சீரிஸின் (Moto G Series) கீழ் ஒரு புதிய மாடலை, கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. என்ன மாடல்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம்? என்ன விலைக்கு வரலாம்?

என்ன மாடல்? மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி96 (Moto G96) எனகி என்கிற புதிய ஜி சீரிஸ் போனை உருவாக்கி வருகிறது. இது மோட்டோ ஜி86 உடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வழியாக மோட்டோ ஜி96 மாடலின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.

அப்படி போடு விலையில் 144Hz pOLED டிஸ்பிளே, 12GB ரேம்!

மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Moto G96 Smartphone Specifications)? இந்த போனில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் மற்றும் வாட்டர் டச் 2.0 உடனான 6.67-இன்ச் கர்வ்டு பிஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். இது செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட்டை கொண்டு இருக்கலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மோட்டோ ஜி85 மாடலில் பார்த்ததை போலவே இருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்டின் கீழ் இயங்கும் என்று கூறப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரலாம். மோட்டோரோலா நிறுவனம் புதிய 7எஸ் ஜென் 3 சிப்பை பயன்படுத்தவில்லை என்றாலும், 7எஸ் ஜென் 2 சிப் ஆனது மோட்டோ ஜி95 மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்பை விட ஒரு படி மேலே உள்ளது.

Take a Poll

கேமராக்களை பொறுத்தவரை மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி LYTIA 700C ப்ரைமரி சென்சார் மற்றும் 8எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவைகள் பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை இந்த போனில் 5500mAh பேட்டரி இடம்பெறலாம்.

மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (Moto G96 Smartphone Price in Idnia)? மோட்டோ ஜி96 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அறிமுகத்தின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இருப்பினும், இந்த போன் இந்தியாவில் ரூ.25,000 க்கு கீழே என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லீக் ஆன புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது மோட்டோ ஜி96 நான்கு கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். அனைத்துமே வேகன் லெதரால் செய்யப்பட்டவை: கேட்லியா ஆர்க்கிட் (லாவெண்டர்), டிரெஸ்டன் ப்ளூ, கிரீனர் பேஸ்டர்ஸ் மற்றும் ஆஷ்லீ ப்ளூ.

மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Moto G86 5G Smartphone Specifications)?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.67-இன்ச் 1.5கே கர்வ்டு pOLED டிஸ்பிளே

- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- 12ஜிபி ரேம் '
- 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்கள் உடனான ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்

- OIS ஆதரவு உடன் 50எம்பி சோனி LYT-600 ப்ரைமரி ஷூட்டர்
- 8எம்பி அல்ட்ராவைடு சென்சார்
- 32எம்பி செல்பீ கேமரா
- ஐபி68 ரேட்டிங்
- இராணுவ தர MIL-STD 810H சான்றிதழ்

- 5ஜி
- 4ஜி VoLTE
- டூயல் பேண்ட் வைஃபை
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ்
- க்ளோனாஸ்
- பெய்டு
- என்எப்சி (NFC)
- டைப்-சி போர்ட்
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5200mAh பேட்டரி அல்லது 6720mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G96 Design Major Specifications Leaked Launching Soon What Could be Price Range in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X