Home
Mobile

மொத்த மார்கெட் அதிருது.. ரூ.17,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. புது Moto மாடல்!

இந்திய மார்கெட்டில் மிரளும்படியான பட்ஜெட்டில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) வெளியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் கொண்ட இந்த மோட்டோ போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): இந்த மோட்டோ போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயர் ரியர் செட்டப் கிடைக்கிறது. மெயின் கேமராவில் வழக்கம்போல ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ சப்போர்ட் கிடைக்கிறது.

மொத்த மார்கெட் அதிருது.. ரூ.17,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh!

இதுபோக மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700சி (SONY LYT 700C) சென்சார் கிடைப்பதால், பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ஜ் கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் வழக்கமாக கிடைக்கும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. டிஸ்பிளேவில் மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

மொத்த மார்கெட் அதிருது.. ரூ.17,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh!

இந்த மோட்டோ ஜி96 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிசைனில் 7.93 எம்எம் தடிமன் மற்றும் 178 கிராம் எடை கிடைக்கிறது. இந்த ஸ்லிம் டிசைனிலும் 5500mAh பேட்டரி கொடுக்கிறது. இதற்கு 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. IP68 ரேட்டிங் கிடைக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. பான்டோன் கிரீனர் பாஸ்ச்சர்ஸ் (PANTONE Greener Pastures), பான்டோன் ஆஷ்லீ ப்ளூ (PANTONE Ashleigh Blue), பான்டோன் கேட்லியா ஆர்க்கிட் (PANTONE Cattleya Orchid) மற்றும் பான்டோன் டிரெஸ்டன் ப்ளூ (PANTONE Dresden Blue) ஆகிய 4 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த மோட்டோ ஜி96 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. ஜூலை 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா (motorola) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G96 5G With 50MP Camera Launched Sale From July 16 on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X