வாங்குனா இதுதான்.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் மோட்டோ பிரியர்கள் வாங்குனா இந்த மாடலைத்தான் வாங்குவோம் என்றும் சொல்லும்படியான பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) வெளியாக இருக்கிறது. டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட், கேமரா போன்ற பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி பட்ஜெட் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. இந்த மோட்டோ ஜி96 5ஜி போனின் முழு விவரங்கள் இதோ.
மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Qualcomm Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி ரேம் பூஸ்ட் (RAM Boost) கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி 3டி கர்வ்ட் டிஸ்பிளே (pOLED 3D Curved Display) கிடைக்கிறது. 395 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் எச்பிஎம் மோட் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. கொரில்லா கிளாஸ் 5 (Corning Glass 5) புரொடெக்சன் மற்றும் வெட் டச் (Wet Touch) சப்போர்ட் கிடைக்கிறது.
இதுபோக IP68 ரேட்டிங் வாட்டர் புரொடெக்சன் மற்றும் வீகன் லெதர் பேனல் கொடுக்கிறது. 5500mAh பேட்டரி இருந்தும் 7.93 எம்எம் தடிமன் மற்றும் 178 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த மோட்டோ ஜி 96 5ஜி போனில் சோனி எல்ஒய்டி (Sony LYT 700C) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) மற்றும் ஆல் பிக்சல் போகஸ் (All Pixel Focus) கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ விஷன் (Macro Vision), ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. மேலும், ஈஐஎஸ் டெக்னாலஜி, 6X டிஜிட்டல் ஜூம் உள்ளது.
மேலும், யுஎச்டி வீடியோ ஷூட் உள்ளது. இந்த மோட்டோ ஜி96 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் (HiRES) ஆடியோ கிடைக்க இருக்கிறது. பான்டோன் (PANTONE) கீழ் கிரீனர் பாஸ்சர்ஸ் (Greener Pastures) கலர் வருகிறது.
அதேபோல கேட்லியா ஆர்க்கிட் (Cattleya Orchid), ஆஷ்லீ ப்ளூ (Ashleigh Blue) மற்றும் டிரெஸ்டன் ப்ளூ (Dresden Blue) ஆகிய கலர்களும் கிடைக்க இருக்கிறது. இப்படி ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. ஜூலை 9ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிகார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்க இருக்கிறது.
இந்த போனின் விலை விவரங்களை மோட்டோரோலா நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், ரூ.16,999 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதுவரை மோட்டோ ஜி சீரிஸ் மாடல்கள் ரூ.15,000 பட்ஜெட் செக்மெண்டிலேயே வெளியாகி இருக்கின்றன. இந்த போனின் பீச்சர்களை வைத்து பார்க்கும்போது, இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








