நாளைக்கு லான்ச் ஆகும் இந்த moto 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோ ஜி96 5ஜி (moto g96 5G) ஸ்மார்ட்போன் ஆனது நாளை (ஜூலை 9) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): இந்த மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், வாட்டர் டச் 2.0. (Water Touch 2.0.) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி சோனி LYTIA 700சி மெயின் சென்சார் + 8எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.
5500mAh பேட்டரி உடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெஸ்டன் ப்ளூ (Dresden Blue),ஆஷ்லீ ப்ளூ (Ashleigh Blue), கிரீனர் பேஸ்டர்ஸ் (Greener Pastures), கேட்லியா ஆர்க்கிட் (Cattleya Orchid) நிறங்களில் மோட்டோ ஜி96 5ஜி போன் வாங்க கிடைக்கும். மேலும் இந்த புதிய போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








