ஆர்டர் போட்ருங்க.. 5500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) ஸ்மார்ட்போன் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 5500எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மோட்டோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசானில் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,450 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,450 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் ,1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் , 300Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதுவும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த மோட்டோரோலா போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
இந்த மோட்டோ ஜி96 5ஜி போன் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
மோட்டோ ஜி96 5ஜி போன் 5500mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் பான்டோன் கிரீனர் Pastures (PANTONE Greener Pastures), பான்டோன் ஆஷ்லீ ப்ளூ (PANTONE Ashleigh Blue), பான்டோன் கேட்லியா ஆர்க்கிட் (PANTONE Cattleya Orchid), பான்டோன் டிரெஸ்டன் ப்ளூ (PANTONE Dresden Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications
