நாளைக்கு SALE-க்கு வரும் இதுக்கு தான் வெயிட்டிங்.. SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
நம்ப முடியாத பட்ஜெட்டில் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி கேமரா, 5500mAh பேட்டரி பீச்சர்களுடன் வந்த மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) போனின் விற்பனை நாளை தொடங்குகிறது. இந்த போனின் பட்ஜெட் மட்டுமல்லாமல், பீச்சர்களும் பக்காவாக இருப்பதால் பலர் காத்திருக்கின்றனர். இந்த மோட்டோ போனின் விலை விவரங்களையும், பீச்சர்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
நாளைக்கு விற்பனைக்கு வரும் இந்த மோட்டோ ஜி96 5ஜி போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல மோட்டோரோலா (motorola) தளத்திலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 17,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது.

இந்த விலையிலேயே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே & டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்ட டிசைன் கொடுக்கிறது. இந்த டிசைனுடன் பான்டோன் கேட்லியா ஆர்க்கிட் (PANTONE Cattleya Orchid), பான்டோன் கிரீனர் பாஸ்ச்சர்ஸ் (PANTONE Greener Pastures) மற்றும் பான்டோன் ஆஷ்லீ ப்ளூ (PANTONE Ashleigh Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
மேலும், பான்டோன் டிரெஸ்டன் ப்ளூ (PANTONE Dresden Blue) கலரும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதுவொரு வீகன் லெதர் (Vegan Leather) பேனல் கொண்ட மாடலாகும். இதுபோக IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கிடைக்கிறது. டிசைன் & குவாலிட்டி பக்காவாக உள்ளது.
மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 7s Gen 2) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிசைன் மட்டுமல்லாமல், அதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி + கேமிங் பிரியர்கள் விரும்பும்படியான டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். இந்த ஜி96 5ஜி போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 395 பிபிஐ பிக்சல் டென்சின்டி மற்றும் வாட்டர் டச் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் + 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதற்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் உள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த மோட்டோ போன் கொடுக்கிறது.
68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பெரிய பேட்டரியுடன் 7.93 எம்எம் தடிமனில் மட்டுமே பாடி கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற வழக்கமாக மிட்-ரேஞ்ச் பீச்சர்களை இந்த மோட்டோ ஜி96 5ஜி போன் கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications








