Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. சோனி கேமரா.. IP68 ரேட்டிங்.. வருகிறது புதிய Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஒரு புதிய டீசரை வெளியிட்டுள்ளது. அதில் ஆல் ஐஸ் ஆன் யூ (All eyes on you) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அந்த டீசர் டூயல் ரியர் கேமராக்கள், நான்கு நிறங்கள், ஸ்னாப்டிராகன் சிப், வாட்டர்ப்ரூஃப் பாடி போன்றவை தெரிகிறது. எனவே இது மோட்டோ ஜி96 5ஜி போன் தான் என்று கூறப்படுகிறது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, அடுத்து இந்தியாவில் மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. எனவே இந்த மோட்டோ போன் தான் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ ஜி96 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 6.67-இன்ச் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், வாட்டர் டச் 2.0. (Water Touch 2.0.) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி சோனி LYTIA 700சி மெயின் சென்சார் + 8எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Moto 5ஜி போன்.. எந்த மாடல்?

5500mAh பேட்டரி உடன் மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,990 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credit: fonearena, androidheadlines, AH

Best Mobiles in India

English summary
moto g96 5G India Launch Teaser: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X