Home
Mobile

இதுதான் பக்கா ஆஃபர்.. வெறும் ரூ.14,999-க்கு 5500mAh பேட்டரி.. pOLED டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் 2025 (Flipkart Big Billion Days 2025) விற்பனையில் மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) ஸ்மார்ட்போனுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. 5500mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பிஓஎல்இடி டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பார்த்துவிட்டு, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வெளியான போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருந்தது. இப்போது, ரூ.2,000 நேரடி விலை குறைப்பு போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, 128 ஜிபி மாடலை ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

இதுதான் பக்கா ஆஃபர்.. வெறும் ரூ.14,999-க்கு 5500mAh பேட்டரி.. pOLED!

256 ஜிபி மாடலை ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த விலை குறைப்பு போக பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் கூடுதலாக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் பெற்று கொள்ளலாம். அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனிலும் வாங்கி கொள்ளலாம்.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. பிரீமியம் லுக்கில் பான்டோன் கிரீனர் பாஸ்ச்சர்ஸ் (PANTONE Greener Pastures), பான்டோன் கேட்லியா ஆர்க்கிட் (PANTONE Cattleya Orchid), பான்டோன் ஆஷ்லீ ப்ளூ (PANTONE Ashleigh Blue) மற்றும் பான்டோன் டிரெஸ்டென் ப்ளூ (PANTONE Dresden Blue) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

மோட்டோ ஜி96 5ஜி அம்சங்கள் (Moto G96 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் அந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

இதற்கு 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. அதோடு 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் பக்காவாகவே இருக்கின்றன. டிஸ்பிளே பீச்சர்களும் பட்ஜெட்டைவிட கூடுதல் அவுட்புட் கொடுக்கும்படி இருக்கின்றன. ஆகவே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

இதுபோக 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு மட்டுமல்லாமல், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது.

இந்த மோட்டோ ஜி96 5ஜி ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேக்ரோ சப்போர்ட் கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700சி (SONY LYT 700C) சென்சார் மற்றும் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கிடைக்கிறது.

ஓஐஎஸ் டெக்னாலஜி மட்டுமல்லாமல், ஈஐஎஸ் (எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) கிடைக்கிறது. நைட் விஷன் மோட், ஆட்டோ நைட் விஷன் மோட், ப்ரோ மோட், ஷாட் ஆப்டிமைசேஷன் போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G96 5G Available At Discounted Price in Flipkart Big Billion Days 2025 Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X