டிசம்பர் 8: 64எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி9 பவர்.!
அண்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999-விலையில் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி9 பவர் 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என மூன்று கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் 60 மணிநேரம் வரை இருக்கும். இணைப்பு ஆதரவுகளாக வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications