Home
Mobile

6000 mAh பேட்டரி, 20W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தோடு மோட்டோ ஜி9 பவர்: விலை மற்றும் அம்சங்கள்!

64 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட மூன்று கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் விவரங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

மோட்டோ ஜி 9 பவர்

மோட்டோ ஜி 9 பவர்

நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி 9 பவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி 9 தொடரில் புது மாடல் ஸ்மார்ட்போனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி9, மோட்டோ ஜி9 ப்ளஸ் மற்றும் மோட்டோ ஜி 9 ப்ளே ஆகியவை மோட்டோ ஜி 9 சீரிஸில் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிதாக மோட்டோ ஜி9 பவர் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி9 பவர்: விலை

மோட்டோ ஜி9 பவர்: விலை

மோட்டோ ஜி9 பவர் விலை மற்றும் விற்பனை குறித்து யுகே மோட்டோ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128 சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி ரூ.17,400 ஆக இருக்கிறது. ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து தகவல் எதுவுமில்லை.

மோட்டோ ஜி 9 பவர்: அம்சங்கள்

மோட்டோ ஜி 9 பவர்: அம்சங்கள்

ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி9 பவர் 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

மோட்டோ ஜி 9 பவர்: கேமரா

மோட்டோ ஜி 9 பவர்: கேமரா

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என மூன்று கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் 60 மணிநேரம் வரை இருக்கும். இணைப்பு ஆதரவுகளாக வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
Moto G9 Power Launched with 6000 mAh Battery, Triple Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X