விலை ரூ.11,999: 64எம்பி கேமரா, 6000mAh பேட்டரியுடன் மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
மோட்டோரோலாவின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான கேமரா, சிறந்த மென்பொருள் மற்றும் அருமையான பேட்டரி வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி9 பவர் 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என மூன்று கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் 60 மணிநேரம் வரை இருக்கும். இணைப்பு ஆதரவுகளாக வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்புவரும் டிசம்பர் 15-ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








