இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Moto G9 Plus.. கிடைத்தது BIS அங்கீகாரம்..என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..

|

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சான்றளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்தியா வெளியீடு விரைவில் நிகழும் என்பதை தான் பிஐஎஸ் தோற்றம் குறிக்கிறது.

மோட்டோ ஜி 9 பிளஸ்

மோட்டோ ஜி 9 பிளஸ்

மை-ஸ்மார்ட் பிரைஸின் அறிக்கையின்படி, மாடல் எண்கள் XT2083-7 மற்றும் XT2087-3 ஆகியவற்றைக் கொண்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன் சமீபத்தில் சான்றிதழ் பெற்றுள்ளது. சான்றிதழ் ஸ்மார்ட்போனின் பெயரை வெளிப்படுத்தவில்லை என்றாலும், எக்ஸ்டி -2087 மாடல் எண் மோட்டோ ஜி 9 பிளஸுக்கானது என்பதை அந்த பக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட Moto G9 Plus

ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட Moto G9 Plus

மோட்டோ ஜி 9 பிளஸ் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல் ஸ்டோரேஜுக்கு 299 யூரோ என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ. 26,000 ஆகும்.

Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

மோட்டோ ஜி 9 பிளஸ் சிறப்பம்சம்

மோட்டோ ஜி 9 பிளஸ் சிறப்பம்சம்

மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் என்ன-என்ன சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

மோட்டோ ஜி 9 பிளஸ் சிறப்பம்சம்

  • 6' இன்ச் உடைய 2400 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • குவாட்-கேமரா அமைப்பு

    குவாட்-கேமரா அமைப்பு

    • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ்
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
    • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Moto G9 Plus Has Been Reported To Be Certified By Bureau of Indian Standards In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X