Home
Mobile

மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 48எம்பி கேமரா, சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆகஸ்ட் 31-ம் தேதி

வெளிவந்த தகவலின்படி வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி 12மணி அளவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மாடல் 6.5எச்டி பிளஸ்

மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் மாடல் 6.5எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600×720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வ

மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பின்புறம் 48எம்பி

மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

000எம்ஏஎச்

மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் டர்போ சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, எனவே விரைவில் சார்ஜ் செய்திட முடியும்.

வோல்டிஇ, வைஃபை 802.11 பி /

இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் இரட்டை சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 11,499-விலையில் இந்த மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G9 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X