ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP கேமரா.. 5200mAh பேட்டரி.. 2TB மெமரி.. புது moto போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படியான பீச்சர்களுடன் மோட்டோ ஜி87 (moto g87) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா, 5200mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த மோட்டோவின் விவரங்களை பார்க்கலாம்.
மோட்டோ நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் 70 அல்ட்ரா (motorola razr 70 ultra), மோட்டோரோலா ரேசர் 70+ (motorola razr 70+) மற்றும் மோட்டோரோலா ரேசர் 70 (motorola razr 70) ஆகிய ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போனும் வெளியாகி இருக்கிறது. இதில் ரேசர் மாடல்களின் விலை ரூ.1 லட்சம் மேல் இருக்கின்றன.

ஆகவே, மிட்-ரேஞ்ச் பிரியர்களின் ஒட்டுமொத்த கவனமும் மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் மீது திரும்பிவிட்டது. ஏனென்றால், 200 எம்பி கேமரா மட்டுமல்லாமல், அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுத்துள்ளது. பிரீமியம் டியூரபிலிட்டிக்காக IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது.
மோட்டோ ஜி87 அம்சங்கள் (moto g87 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. மோட்டோ செக்யூர் (Moto Secure) உள்ளிட்டவையுடன் ஹேலோ யூஎக்ஸ் (Hello UX) கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ( Corning Gorilla Glass 7i) புரொடெக்சனுடன் 6.78 இன்ச் (1272 x 2772 பிக்சல்கள்) எக்ஸ்ட்ரீம் அமோலெட் (Extreme AMOLED) டிஸ்பிளேவை இந்த மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
12 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டும் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மெயின் கேமராவில் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கிடைக்கிறது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 2எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் கிடைக்கிறது. போர்ட்ராய்டு மோட், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. மேஜிக் எரைசர், போட்டோ அன்பிளர், ஆட்டோ ஃபிரேம் உள்ளிட்ட ஏஐ கேமரா பீச்சர்களையும் இந்த மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி டியூரபிலிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. MIL-STD-810H சர்டிபிகேஷன் மிலிட்டரி ஸ்டான்டர்டு கிடைக்கிறது.
30W டர்போ சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.38 எம்எம் தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொடுக்கிறது. ரூ.44,253 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் வெளியாகி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓரிரு மாதங்களில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications