Home
Mobile

அடுத்த மோட்டோரோலா போன் ரெடி.. 256ஜிபி மெமரி.. Dimensity சிப்செட்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ ஜி87 போனின் விவரக்குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி87 அம்சங்கள்: மீடியாடெக் டைமன்சிட்டி 6000-சீரிஸ் சிப்செட்(MediaTek Dimensity 6000-series chip)உடன் இந்த மோட்டோ ஜி87 போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

அடுத்த மோட்டோரோலா போன் ரெடி.. 256ஜிபி மெமரி.. Dimensity சிப்செட்..

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor), 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். தற்போது மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் தான் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் சமீபத்தில் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ ஓஎஸ்
- மூன்று ஆண்டுகள் வரை ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்கிற உத்திரவாதம்
- 6.8-இன்ச் சூப்பர் எச்டி (1,272x2,772 பிக்சல்ஸ்) எக்ஸ்ட்ரீம் AMOLED 10-பிட் டிஸ்பிளே
- குறிப்பிட்ட ஆப்களில் 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 5,200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 360Hz டச் சாம்பிளிங் ரேட்
- 96.8 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- 450ppi பிக்சல் டென்சிட்டி
- 100 சதவீத DCI-P3 கலர் கேமட்
- HDR10+ ஆதரவு
- SGS ப்ளூ லைட் ரிடக்ஷன் மற்றும் SGS மோஷன் ப்ளர் ரிடக்ஷன் சான்றிதழ்கள் -
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68+IP69 ரேட்டிங்
- MIL-STD 810H நீடித்துழைப்பு சான்றிதழ்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட்
- 12ஜிபி வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 256ஜிபி UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன் ஸ்க்ரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- சோனி LYT-710 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா
- 122-டிகிரி [பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா
- குறிப்பிடப்படாத மூன்றாவது சென்சார்
- ஆட்டோஃபோகஸ் உடனான 50-மெகாபிக்சல் (f/1.9) செல்பீ கேமரா
- 4K/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 6,500mAh பேட்டரி
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.4, NFC, ஒரு USB டைப்-C போர்ட், GPS, GLONASS மற்றும் கலிலியோ
- ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் இ-காம்பஸ்
- அளவீட்டில் 162.7x75.6x6.99மிமீ
- எடையில் சுமார் 183 கிராம்.

அடுத்த மோட்டோரோலா போன் ரெடி.. 256ஜிபி மெமரி.. Dimensity சிப்செட்..

8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனின் விலை ரூ.38,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.41,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G87 will be launched in India soon: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X