Home
Mobile

நாடே எதிர்பார்த்த மோட்டோரோலா 5ஜி போன் வருகிறது.. 200எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் அடுத்த மாதம் மோட்டோ ஜி87 (Moto G87) ஸ்மார்ட்போனை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளியாகும். அதேபோல் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி87 போன். மேலும் இந்த போனின் இடது பக்கத்தில் சிம் கார்டு ஸ்லாட் உள்ளது. அதேபோல் இந்த போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் உள்ளன.

நாடே எதிர்பார்த்த மோட்டோரோலா 5ஜி போன் வருகிறது.. எந்த மாடல்?

மோட்டோ ஜி87 அம்சங்கள் (Moto G87 specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6000-சீரிஸ் சிப்செட்(MediaTek Dimensity 6000-series chip) உடன் இந்த மோட்டோ ஜி87 போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் 200எம்பி ரியர் கேமரா உடன் மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

நாடே எதிர்பார்த்த மோட்டோரோலா 5ஜி போன் வருகிறது.. எந்த மாடல்?

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்டிக் சீல், பிளாக் ஆலிவ், நைல் மற்றும் ஷேடட் ஸ்ப்ரூஸ் போன்ற நிறங்களில் இந்த மோட்டோ ஜி87 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் பெரிய பேட்டரி வசதி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto G87 Renders, specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X