இறங்கி அடிச்ச மோட்டோ.. வெறும் ரூ.16,999 பட்ஜெட்ல 6720mAh பேட்டரி.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி86 பவர் 5ஜி (moto g86 Power 5G) போனானது, இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளியாகி இருக்கிறது. இந்த செக்மெண்ட்டில் 4500 பிரைட்னஸ் கொண்ட மாடலாக மட்டுமல்லாமல், பிஓஎல்இடி டிஸ்பிளே, 6720mAh பேட்டரி, ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் டைன்சிட்டி 740 சிப்செட் கொண்ட இந்த மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோ ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g86 Power 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் அதற்கு 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஆக்டா கோர் மீடியாடெக் டைன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடல்களுக்கு நிகரான புரொடக்சனுடன் டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனுடன் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் அதிக பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவை கொடுக்கும் மாடலாகவும் இந்த மோட்டோ ஜி86 பவர் 5ஜி போன் இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 1 வேரியண்ட் மற்றும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) கேமரா கிடைக்கிறது.
மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ கேமராவை கொடுக்கும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது. மோட்டோவின் குவாட் பிக்சல் டெக்னாலஜி மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி86 பவர 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஜி சீரிஸ் மாடல்களைவிட அதிக பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 6720mAh பேட்டரி மற்றும் 33W டர்போ சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குவாலிட்டி பீச்சர்களை பார்க்கையில், கொரில்லா கிளாஸ் மட்டுமல்லாமல், IP68, IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுத்துள்ளது.
இதுபோக லேட்டஸ்ட் மோட்டோ மாடல்களில் கிடைக்கும் MIL-STD 810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது, விலையை பார்க்கலாம்.
இந்த மோட்டோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), மோட்டோ தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








