பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 6720mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. pOLED டிஸ்பிளே.. என்ன விலை?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ ஜி86 பவர் 5ஜி (Moto g86 Power 5G) போனுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. பெரிய 6720mAh பேட்டரி மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி சோனி சென்சார் கேமரா, பிஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனின் விலை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ், ஓப்போ போன்களுக்கு கிடைப்பதை போல மோட்டோ போன்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இல்லை என்றாலும், குவாலிட்டி மற்றும் டிசைனை வைத்து பார்க்கையில் கம்மியான விலைக்கே பக்கா மாடல்கள் இதில் கிடைக்கின்றன. இதனாலேயே மேட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் மோட்டோ ஜி86 பவர் 5ஜி மிரளவிட்டுள்ளது.

பில்ட் குவாலிட்டி பக்கம் பார்கையில், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் MIL-STD 810H சர்டிபிகேஷனை இந்த மோட்டோ ஜி86 பவர் 5ஜி போன் பெற்றுள்ளது. இதுபோக டிஸ்பிளேவுக்கும் புரொடெக்சனை கொடுக்கிறது.
ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை பெற்று கொள்ளலாம். இந்த பில்ட் குவாலிட்டியுடன் பான்டோன் காஸ்மிக் ஸ்கை (PANTONE Cosmic Sky), பான்டோன் கோல்டன் சைப்ரஸ் (PANTONE Golden Cypress) மற்றும் பான்டோன் ஸ்பெல்பவுண்ட் (PANTONE Spellbound) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ஓஎஸ் அப்டேட்டிலும் குறை சொல்ல முடியாது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், அதற்கு 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. சோனி சென்சாருடன் ரியர் கேமரா கிடைப்பதால், இந்திய பிரியர்களுக்கு ஏற்ப அவுட்புட் எதிர்பார்க்க முடிகிறது. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 உடனடி தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இந்த பட்ஜெட்டுக்கு கூடுதலாகவே பீச்சர்கள் கிடைக்கின்றன. என்னென்ன பீச்சர்கள் வருகிறது.
மோட்டோ ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g86 Power 5G Specifications): கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு 1.5K ரெஃப்ரெஷ் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
முன்பே சொன்னதை போல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் கிடைக்கிறது. மோட்டோ ஏஐ (moto ai) பீச்சர்கள் மற்றும் இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி 615 ஜிபியு (Mali G615 GPU) கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொடுக்கிறது.
இந்த கேமராவுக்கு மேக்ரோ விஷனுடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி சிப்செட் கிடைக்கிறது. மேலும், 32 எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் வருகின்றன. பெரிய 6720mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








