Home
Mobile

டபுள் ட்ரீட் ப்ரோ.. பட்ஜெட்ல 6720mAh பேட்டரி.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி சீரிஸ் போன்களுக்கு இந்திய மார்கெட் மட்டுமல்லாமல் பல்வேறு மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் மோட்டோ ஜி86 5ஜி (Moto G86 5G) போன் விரைவில் வெளியாக இருப்பதை மார்கெட் வட்டாரங்கள் உறுதி செய்தன. ஆனால், இப்போது டபுள் ட்ரீட்டாக மோட்டோ ஜி86 பவர் 5ஜி (Moto G86 Power 5G) போனும் களமிறங்க இருக்கிறது. இந்த பவர் மாடலின் கலர் வேரியண்ட்கள் மற்றும் டிசைன் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ ஜி86 5ஜி போனில் 5200mAh பேட்டரி மற்றும் 6720mAh பேட்டரி என்று 2 ஆப்ஷன்கள் வெளியாக இருப்பதாக ஆரம்பத்தில் விவரங்கள் கசிந்தன. இதுவரை மோட்டோரோலா நிறுவனம் அப்படி பேட்டரி ஆப்ஷன்களை கொடுத்தது கிடையாது. இதனால் மோட்டோ பிரியர்களே குழப்பத்தில்தான் இருந்தனர். ஆனால், இப்போது, கூடுதலாக மோட்டோ ஜி86 பவர் 5ஜி என்னும் மாடல் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது.

டபுள் ட்ரீட் ப்ரோ.. பட்ஜெட்ல 6720mAh பேட்டரி.. pOLED டிஸ்பிளே.. மாடல்?

ஆகவே, இந்த பவர் மாடலிலேயே 6720mAh பேட்டரி கிடைக்க இருப்பது தெரிகிறது. இந்த போனின் கலர் வேரியண்ட்களின் விவரங்கள் கசிந்துள்ளன. ஃபேல் ரெட் கலரில் கிரிஸான்தமம் (Chrysanthemum), லாவெண்டர் கலரில் காஸ்மிக் ஸ்கை (Cosmic Sky), ஆலிவ் கிரீன் கலரில் கோல்டன் சைப்ரஸ் (Golden Cypress) மற்றும் ப்ளூ கிரே கலரில் ஸ்பெல்பவுண்ட் (Spellbound) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இதில் 6720mAh பேட்டரி கிடைப்பதால், மோட்டோ ஜி86 5ஜி மாடலைவிட வெயிட் மற்றும் தடிமன் அதிகமாக இருக்க போகிறது. ஆகவே, 8.65 எம்எம் தடிமன் மற்றும் 198 கிராம் எடையில் கிடைக்க போகிறது. அதுவே, மோட்டோ ஜி86 5ஜி மாடலில் 5200mAh பேட்டரி மட்டுமே கிடைக்க இருப்பதால், 7.87 தடிமன் மற்றும் 185 எடையில் கிடைக்க இருக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே இரண்டு மாடல்களில் இருந்தும் வேறுபடாக இருக்க போகிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்று இதுவரையில் கசிந்த பீச்சர்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் போன்ற டிசைன் தொடங்கி டிஸ்பிளே, சிப்செட் மற்றும் ரேம் வேரியண்ட்கள் ஒரே மாதிரியாகவே இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மோட்டோ ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (Moto G86 Power 5G Specifications): இந்த பவர் மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமண்ட்சிட்டி 7300 (4nm Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல பட்ஜெட் மோட்டோவில் கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொடுக்கிறது.

பட்ஜெட் மாடலாக இருந்தாலும், இரண்டு ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்ஸ் (OS Update) மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்களை கொடுக்கிறது. 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் & 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மோட்டோ ஜி85 5ஜி போனில் டூயல் கேமரா கிடைத்தது. ஆனால், இதில் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு + மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. சோனி எல்ஒய்டி 600 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 32 எம்பி செல்ஃபி ஷூட்டர் வருகிறது. ஜி85 போனை போலவே பட்ஜெட் மாடலாக இது வெளியாக வாய்ப்புள்ளது.

Image Credits: Android Headlines

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G86 Power 5G With 50MP Camera 8GB RAM Launch Soon Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X