Home
Mobile

நாளை களமிறங்கும் புதிய Moto 5ஜி போன்.. சோனி கேமரா.. 6720mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி86 பவர் 5ஜி (moto g86 power 5G) ஸ்மார்ட்போன் நாளை ( ஜூலை 30) மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g86 Power 5G specifications) : 50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோ ஜி86 பவர் 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது.

நாளை களமிறங்கும் புதிய Moto 5ஜி போன்.. சோனி கேமரா.. 6720mAh பேட்டரி..

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதி மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனில் உள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atoms),
டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது.

மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் கொண்டுள்ளது. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

6720mAh பேட்டரி கொண்டுள்ளது மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த மோட்டோ போன் வெளிவரும். அதேபோல் இந்த புதிய மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
moto g86 power 5g will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X