Home
Mobile

ஆரம்பமே சலுகை.. இன்று விற்பனைக்கு வரும் புதிய Moto 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி86 பவர் 5ஜி (Moto g86 Power 5G) ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி86 பவர் 5ஜி. இப்போது இந்த போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g86 Power 5G specifications) : 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆரம்பமே சலுகை.. இன்று விற்பனைக்கு வரும் புதிய Moto 5ஜி போன்..

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

மோட்டோ ஜி86 பவர் 5ஜி போன் 50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atoms), டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

குறிப்பாக 6720mAh பேட்டரி உடன் மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். பான்டோன் காஸ்மிக் ஸ்கை (PANTONE Cosmic Sky), பான்டோன் கோல்டன் சைப்ரஸ் (Pantone Golden Cypress), பான்டோன் ஸ்பெல்பவுண்ட் (Pantone Spellbound) நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g86 Power 5G goes on sale for the first time in India: check specification, price, offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X