அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. டிஸ்கவுண்ட்டில் 6720mAh பேட்டரி.. pOLED டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் சூப்பர் வேல்யூ வீக் சேல் 2025 (Super Value Week Sale 2025) சலுகையில் மோட்டோ ஜி86 பவர் 5ஜி (moto g86 Power 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 6720mAh பேட்டரி, 33W சார்ஜிங், பிஓஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் மெயின் கேமராவை கொடுக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் சூப்பர் வேல்யூ வீக் சேல் 2025 நடக்கிறது. இதில் மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனானது 10 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.17,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். குறிப்பிட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை இந்த விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிரீமியம் லுக் கொடுக்கும் பான்டோன் காஸ்மிக் ஸ்கை (PANTONE Cosmic Sky), பான்டோன் கோல்டன் சைப்ரஸ் (PANTONE Golden Cypress) மற்றும் பான்டோன் ஸ்பெல்பவுண்ட் (PANTONE Spellbound) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.
மோட்டோ ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் (Moto g86 Power 5G Specifications): இந்த மோட்டோவில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்து இருக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) சப்போர்ட் கிடைக்கிறது. கொரில்லா கிளாஸ் மட்டுமல்லாமல், மொத்தமாகவே டியூரபிலிட்டி பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. மிட்-ரேஞ்ச் ஐபி ரேட்டிங் + மிலிட்டரி கிரேடு பாதுகாப்பு கிடைக்கிறது.
ஆகவே, இந்த மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனில் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL-STD 810H சர்டிபிகேஷனை கொடுக்கிறது. ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைன்சிட்டி 7400 (Octa Core 4nm MediaTek Dimensity 7400) சிப்செட் கிடைக்கிறது.
2 ஓஎஸ் அப்கிரேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அதேபோல 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். பவர் சீரிஸ் கீழ் வெளியாகி இருப்பதால், பெரிய 6720mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 33W டர்போ சார்ஜிங் பெற்று கொள்ளலாம். டிரிபிள் ரியர் கேமராவை கொடுக்கிறது.
ஆகவே, இந்த மோட்டோ போனில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கும் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. அதேபோல 3-இன்-1 ஃபிளிக்கர் ப்ரீ சென்சார் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா + யுஎச்டி (UHD) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மட்டுமல்லாமல், ஹை-ரெஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), வை-பை 6 (Wi-Fi 6), ஜிபிஎஸ் (GPS) கிடைக்கிறது. டூயல் ஹைபிரிட் சிம் சிலாட் உள்ளது. ஆன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் 24 வரையில் ரேம் பூஸ்ட் (RAM Boost) சப்போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








