Home
Mobile

ரெடியா இருங்க.. சோனி கேமரா.. 33W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புதிய Moto போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி86 (Moto G86) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது தற்போது BIS சான்றிதழ் தளத்தில் XT2527-5 என்ற மாடல் நம்பர் கொண்ட ஒரு மோட்டோ போன் காணப்பட்டுள்ளது குறிப்பாக இது மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அதேபோல் சமீபத்தில் தான் மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போன் ஆனது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெடியா இருங்க.. இந்தியாவுக்கு வரும் புதிய Moto போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி86 அம்சங்கள் (Moto G86 specifications) : தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM
(Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் வசதி மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (In-display Fingerprint Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

அதேபோல் 50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோ ஜி86 போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atoms), டூயல் மைக்ரோபோன்கள்(dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போனில் உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போன். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

மேலும் 5200mAh பேட்டரி வசதி மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என்எப்சி, ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த மோட்டோ போன் விற்பனைக்கு வரும்.

உலக சந்தையில் மோட்டோ ஜி86 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் இந்த புதிய மோட்டோ போன் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G86 may be launched in India soon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X