இன்னும் முடியலயா.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. 6720mAh பேட்டரி.. SONY கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?
மோட்டோரோலா பிரியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே பல்வேறு புதிய மாடல்கள் களம் இறக்கப்பட்டு வருகிறது. மோட்டோரோலா 60 சீரிஸ், மோட்டோரோலா ரேசர் 60 சீரிஸ் போன்றவற்றில் பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஒரு சில மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் வெளியாக தயாராக இருக்கிறது. இப்போது, மோட்டோ ஜி சீரிஸில் புதிய மாடல் ஒன்று வெளியாக இருக்கிறது. பட்ஜெட்டில் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 6720mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த போனின் விவரங்கள் இதோ.
இந்திய மார்க்கெட்டில் மோட்டோ ஜி85 5ஜி போனானது பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது மோட்டோ ஜி86 5ஜி மாடலானது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், இந்திய மார்க்கெட்டில் வெளியாகவில்லை. முதலில் குளோபல் மார்க்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் அந்த போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்க்கெட்டில் கசிந்துள்ளன.

மோட்டோ ஜி86 5ஜி அம்சங்கள் (Moto g86 5G Specifications): இந்த மோட்டோ போனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசல்யூஷன் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டுகள் மற்றும் நான்கு வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை இந்த மோட்டோ ஜி86 5ஜி போன் கொடுக்கிறது. பட்ஜெட்டில் மீட்-பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமண்ட்சிட்டி 73004என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த போனில் இரண்டு மாடல்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
ஆகவே 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த மோட்டோ போனின் 50 எம்பி மெயின் கேமராவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் வருகிறது. மேக்ரோ லென்ஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு செகண்டரி கேமரா கிடைக்கிறது. 2.2 அபெர்ச்சருடன் 32 எம்பி செல்ஃபி ஷூட்டர் கிடைக்கிறது.
ஆகவே, கேமரா, சிப்செட், டிஸ்பிளே பீச்சர்களில் மோட்டோ ஜி85 5ஜி போனை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது. பேட்டரியை பொருத்தவரையில் இரண்டு மாடல்களில் கிடைக்க இருக்கிறது. இது அந்தந்த மார்க்கெட்டுக்கு ஏற்ப கிடைக்க இருக்கிறது. 33W டர்போ சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி மற்றும் 33W டர்போ சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6720mAh பேட்டரி என்ற இரண்டு மாடல்கள் வருகின்றன. இந்தியாவில் அதிக கேபாசிட்டி கொண்ட பேட்டரி மாடல் வர வாய்ப்புள்ளது.
இந்த மோட்டோ ஜி86 5ஜி போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் மோட்டோ போன்களில் கிடைக்கும் MIL-STD 810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி இந்த போனிலும் கிடைக்கிறது. இது போக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio), டூயல் மைக்ரோஃபோன்கள் (Dual Microphones) மற்றும் டைப்-சி ஆடியோ (Type C Audio) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த மோட்டோ ஜி86 5ஜி போனில் பான்டோன் ஸ்பெல்பவுண்ட் (Pantone Spellbound), பான்டோன் (Pantone Chrysanthemum), பான்டோன் காஸ்மிக் ஸ்கை (Pantone Cosmic Sky), பான்டோன் கோல்டன் சைப்ரஸ் (Pantone Golden Cypress) கலர்கள் வெளியாக இருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.20,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கம்போல முதலில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளிலும் அதன் பிறகு இந்தியா உட்பட மற்ற மார்க்கெட்டுகளிலும் கிடைக்க இருக்கிறது. குளோபல் வெளியீடு ஓரிரு வாரங்களில் இருக்கும். அதன் பிறகு இந்திய மார்க்கெட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும். மோட்டோ ஜி85 5ஜி போன் இந்திய மார்க்கெட்டில் கிடைப்பதால், இந்த போனை இங்கு நிச்சயம் எதிர்பார்க்கலாம். கஸ்டமர்களிடையே வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








