மார்க்கெட்டே மிரள போகுது.. 50எம்பி கேமரா.. டால்பி அட்மாஸ்.. புதிய Moto 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
கடந்த ஆண்டு மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம். இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மோட்டோ ஜி85 (moto g85) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
தற்போது மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனின புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது கர்வ்ட் டிஸ்பிளே டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் கிரீன் மற்றும் கிரே நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி85 அம்சங்கள் (Moto G85 specifications): 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெற முடியும்.
குறிப்பாக ஸ்னாப்டிராகன் 4 ஜென் 3 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு, 8ஜிபி ரேம், 5ஜி ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். தற்போது வரை மோட்டோ ஜி85 போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் அறிமுகமாகும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மோட்டோ ஜி84 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி84 5ஜி அம்சங்கள் (Moto g84 5G specifications): 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்தது மோட்டோ ஜி84 5ஜி. அதேபோல் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும்.மேலும் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவும் (Adreno 619L GPU) இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் வெளிவந்தது மோட்டோ ஜி84 5ஜி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 (IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவந்தது மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1,ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி84 5ஜி போன்.


Click it and Unblock the Notifications








