மார்க்கெட்டே மிரள போகுது.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. புதிய Moto 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி85 (Moto G85) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஸ்னாப்டிராகன் சிப்செட், ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் முழு அம்சங்களையும் இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி85 அம்சங்கள் (Moto G85 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 3 சிப்செட் (Snapdragon 4 Gen 3 chipset) வசதியைக் கொண்டு மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன். எனவே இந்த கேமரா உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் (black), ப்ளூ (blue), கிரீன் (green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெற முடியும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி85 5ஜி போன். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மோட்டோ போன்.


Click it and Unblock the Notifications