Home
Mobile

அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. ரூ.14,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே கொண்ட மோட்டோ ஜி85 5ஜி (Moto g85 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி வீகன் லெதர் பேனல் பாடியுடன் கிடைக்கும் இந்த மோட்டோ ஜி85 5ஜி போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் வீகன் லெதர் பேனல் கொண்ட மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை ரூ.15,000 பட்ஜெட் மாடல்களிலேயே கொடுத்து மோட்டோ நிறுவனம் தனியிடம் பிடித்து வருகிறது. ஆகவே, 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் வீகன் லெதன் பேனலுடன் ரூ.17,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோ ஜி85 5ஜி போனை களமிறக்கியது.

அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. ரூ.14,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. மாடல்?

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 விலை குறைப்பு போக ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் இருந்தும் மேலும் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.2,000 விலை கம்மியான வாங்கி கொள்ளலாம். ரூ.14,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம்.

வெறும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் வீகன் லெதர் பேனல் மட்டுமல்ல, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுத்து இருக்கிறது. கூடுதலாக IP52 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, குவாலிட்டியிலும் இந்த மோட்டோ ஜி85 5ஜி போனானது பட்ஜெட்டைவிட கூடுதலாகவே பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.

அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. ரூ.14,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. மாடல்?

மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto g85 5G Specifications): ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் 50 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. ரூ.17,999 பட்ஜெட்டில் வெளியாகியதால், சோனி எல்ஒய்டி 600 (SONY LYT 600) சென்சாரை கொடுக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் 16 எம்பி செல்பீ கேமராவை எதிர்பார்க்க முடியும். ஆனால், இதில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆகவே, இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ற அவுட்புட்டை இந்த மோட்டோ ஜி85 5ஜி போனில் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவை பார்க்கையில், 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்கிறது.

இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மாடலாகும். மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பர்ஃபாமென்ஸ் பக்காவாக எதிர்பார்க்கலாம். ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

மோட்டோ நிறுவனத்தின் மை யுஎக்ஸ் (My UX) மக்கும் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் 3 (6nm Qualcomm Snapdragon 6s Gen 3) எஸ்ஓசி மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மீடியம் அவுட்புட் கொடுக்கும். இந்த மோட்டோவில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g85 5G With 50MP Camera Gets Discount Available At Rs 14999 Check Flipkart Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X