ஆர்டர் பொளக்கும்.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் கொண்ட 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனி எல்ஒய்டி 600 சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, 33W டர்போ சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொண்ட மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) மாடலானது, பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த மோட்டோ ஜி85 போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto G85 5G Specifications): இந்த மோட்டோவில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curved pOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) வருகிறது. மோட்டோவின் மை யுஎக்ஸ் (My UX) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் வருகிறது.
1 வருட ஓஎஸ் அப்கிரேட் உள்ளது. மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த மோட்டோ ஜி85 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.
1 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் 8 ஜிபிக்கான ரேம் பூஸ்ட் (RAM Boost) சப்போர்ட் வருகிறது. இந்த மோட்டோ ஜி85 5ஜி போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 சென்சார் வருகிறது.

அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) மற்றும் குவாட் பிடிஏஎப் (Quad PDAF) வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவானது, மேக்ரோ விஷன் (Macro Vision) சப்போர்ட் உடன் வருகிறது. இந்த கேமராவிலும் பிடிஏஎப் (PDAF) வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.
ராவ் போட்டோ அவுட்புட் (RAW Photo Output), ஸ்பாட் கலர் (Spot Color), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. இந்த மோட்டோ ஜி85 5ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 172 கிராம் எடை கொண்டிருக்கிறது. 7.59 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது.
டைப்-சி ஆடியோ, (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) வருகிறது. இந்த மோட்டோ IP52 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. வேகன் லெதர் பேக் கொண்ட கோபால்ட் ப்ளூ (Cobalt Blue) மற்றும் ஆலிவ் கிரீன் (Olive Green) கலர்களில் வருகிறது.
பிஎம்எம்ஏ பேக் கொண்ட அர்பன் கிரே (Urban Grey) கலரும் வருகிறது. இந்த மோட்டோ ஜி85 5ஜி போன் வரும் ஜூலை 10ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டோ போனின் ஆரம்ப விலை ரூ.31,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








