நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Moto 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் நாளை (10-7-2024) இந்தியாவில் புதிய மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா, பிஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அனைத்து தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நாளை மதியம் 12 மணி அளவில் மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த பேன் அறிமுகத்திற்குப் பின்பு பிளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா இணையதளம் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்குவதற்குக் கிடைக்கும். கோபால்ட் ப்ளூ, அர்பன் கிரே மற்றும் ஆலிவ் கிரீன் நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.

மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto G85 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகமாகும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1,600 nits peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல் OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக மோட்டோ ஜி85 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி85 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

மோட்டோ ஜி85 5ஜி போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








