Home
Mobile

கண்ண மூடிட்டு வாங்கலாமே.. ரூ.5000 டிஸ்கவுண்ட்டில் பலே Moto போன்.. 12GB ரேம், 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில், மோட்டோரோலா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று, தற்போது ரூ.5000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. அது மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். மோட்டோரோலா நிறுவனம் கூடிய விரைவில் அதன் மோட்டோ ஜி86 5ஜி மாடலை அறிமுகம் செய்ய உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.20,999 க்கு பதிலாக 23% நேரடி தள்ளுபடியை பெற்று (அதாவது ரூ.5000 விலை குறைப்பை பெற்று) ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக 5% பேங்க் ஆபரும் கிடைக்கிறது. சுவாரஸ்யமாக இந்த டிஸ்கவுண்ட் மோட்டோ ஜி85 5ஜி மாடலின் 4 கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது.

கண்ண மூடிட்டு வாங்கலாமே.. ரூ.5000 டிஸ்கவுண்ட்டில் பலே Moto போன்!

மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷபின் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 வருட சாஃப்ட்வேர் அப்டேட்களும், 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் உடனாக அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் கொண்டு இயங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் உள்ளது.

மோட்டோ ஜி86 5ஜி எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இது இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விலையை பொறுத்தவரை மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் சுமார் ரூ,24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போனின் லீக் ஆன அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.67-இன்ச் 1.5கே கர்வ்டு pOLED டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 கொண்டு இயங்கலாம். இந்த சிப்செட் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இது இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்கள் உடனான ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வைக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது OIS ஆதரவு உடன் 50எம்பி சோனி LYT-600 ப்ரைமரி ஷூட்டர் + 8எம்பி அல்ட்ராவைடு சென்சாரை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5200mAh பேட்டரி அல்லது 6720mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G85 5G Selling At Discounted Price in Flipkart Sale Which Extended to May 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X