யாரு விடுவா சொல்லுங்க.. ரூ.20,000 போதும்.. இந்தியாவுக்கு வரும் தரமான Moto 5ஜி போன்.. எந்த மாடல்?
கடந்த வாரம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 10-ம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த புதிய போன் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), சோனி கேமரா, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய மோட்டோ ஜி85 5ஜி போன் ஆனது ரூ.20,000-க்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கோபால்ட் ப்ளூ, அர்பன் கிரே மற்றும் ஆலிவ் கிரீன் நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto G85 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் மோட்டோ ஜி85 5ஜி இந்தியாவுக்கு வரும். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1,600 nits peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
மோட்டோ ஜி85 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.. பின்பு 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி85 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதி இதில் உள்ளது. இதை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போன் பிளிப்கார்ட் ( Flipkart), மோட்டோரோலா இந்தியா இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் தளத்தில் விற்பனைக்கு வரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








