சூப்பர் டூப்பர் OFFER-ஆ இருக்கே.. 5000mAh பேட்டரி Moto 5ஜி போன் மீது ரூ.5000 விலை குறைப்பு.. எந்த மாடல்?
7000mAh பேட்டரி உடன் புதிய மோட்டோ ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போனாக - மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G) மாடல் ஆனது இந்தியாவில் விற்பனைக்கு வந்த வேகத்தில்.. மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) மாடலின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
பிளிப்கார்ட்டில் தற்போது, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுவாரசியமாக இன்று முதல் (நவம்பர் 12) இந்தியாவில் விற்பனைக்கு வந்த "புத்தம் புதிய" மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையும் கூட ரூ.15,999 தான்!

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷபின் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் உடனாக அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் கொண்டு இயங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் உள்ளது.
மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹலோ யுஎக்ஸ் (1 மேஜர் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள்)
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 6.7-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1,080×2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே
- HDR10+ ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா 7ஐ ப்ரொடெக்ஷன்
- MIL-810H இராணுவ தர டிராப் ப்ரொடெக்ஷன்
- குவால்காமின் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்
- 8ஜிபி ரேம் (இதை ரேம் பூஸ்ட் 4.0 வழியாக 24 ஜிபி வரை விரிவாக்க முடியும்)
- 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- கூகுளின் ஜெமினி ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- ஒரு "டூ-இன்-ஒன் ஃப்ளிக்கர்" கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 5ஜிஆதரவு
- டூயல் பேண்ட் வைஃபை
- ப்ளூடூத் 5.1
- டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம்
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி


Click it and Unblock the Notifications








