ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. சோனி கேமரா.. 30W சார்ஜிங்.. முதல்முறையாக விற்பனைக்கு வரும் Moto 5ஜி போன்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதன் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இப்போது மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள் மற்றும் சலுகைகளை இங்கே பார்க்கலாம்.
மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto G85 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED)டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits peak brightness)மற்றும் சிறந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் மோட்டோ ஜி85 5ஜி போன் வெளிவந்துள்ளது.மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம்+ 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ ஜி85 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
OISஆதரவு கொண்ட 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போசார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் இதில் உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி85 5ஜி போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.16,999-விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








