Home
Mobile

இந்த ஒரு காரணத்திற்காகவே.. Flipkart Big Billion Days Sale-ல் Moto G85 5G-ஐ அடிச்சு புடிச்சு வாங்க போறாங்க!

Moto G85 5G New Colour: இந்தியாவில், கடந்த ஜூலை மாதத்தில் 3 கலர் ஆப்ஷன்களில் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது "நான்காவதாக" புதிய டார்க் க்ரீன் (Dark Green) கலர் ஆப்ஷனை பெறுகிறது. இது செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் (Flipkart Big Billion Days sale) ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது கோபால்ட் ப்ளூ, ஆலிவ் கிரீன் மற்றும் அர்பன் கிரே ஆகிய மூன்று கலர்களில் வாங்க கிடைக்கிறது. இதில் ஆலிவ் கிரீன் ஆப்ஷனின் சற்றே 'டார்க்' ஆன வேரியண்ட் ஆக புதிய டார்க் க்ரீன் வேரியண்ட் இருக்கிறது. அறிமுகத்திற்கு பின்னர் இது பிளிப்கார்ட் மோட்டோரோலா இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்.

Flipkart Sale-ல் Moto G85 5G-ஐ அடிச்சு புடிச்சு வாங்க போறாங்க!

மோட்டோ ஜி85 5ஜி விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.

மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் FHD+ கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் உடனாக அட்ரெனோ 619 ஜிபியு உடன் கிராபிக்ஸ் இயங்குகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது OIS ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 8எம்பி மேக்ரோ-டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இத ஸ்மார்ட்போன் இரண்டு வருட மென்பொருள் அப்டேட்களையும், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் உள்ளது. கடைசியாக இது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது என்னென்ன மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்? மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (125W சார்ஜர்) ரூ.35,999 க்கு பதிலாக வெறும் ரூ.27,999 க்கு (வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மோட்டோரோலா எட்ஜ் 50 ஃபியூஷன் (Motorola Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.22,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கும், மோட்டோ ஜி64 5ஜி (Moto g64 5G) ஸ்மார்ட்போன் ஆனது அசல் விலையான ரூ.16,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கும் வாங்க கிடைக்கும்.

மேலும் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ மற்றும் மோட்டோஜி 04எஸ் (Motorola Edge 50 Neo & Moto g04s) ஸ்மார்ட்போன்களும் கூட டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும். மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அதன் அசல் விலையான ரூ.23,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கும், மோட்டோ ஜி04எஸ் அதன் அசல் விலையான ரூ.7,499 க்கு பதிலாக ரூ.6,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G85 5G New Dark Green Colour Variant Launching Soon Available in Flipkart Big Billion Days sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X